இஸ்ரோவின் 100-வது செயற்கைகோள் - நாளை விண்ணில் ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைகோளை நாளை விண்ணில் செலுத்த உள்ளது. #Sriharikota #PSLVC40 #ISRO
இஸ்ரோவின் 100-வது செயற்கைகோள் - நாளை விண்ணில் ஏவப்படுகிறது
Published on

ஸ்ரீஹரிகோட்டா:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமன இஸ்ரோ, கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டு இருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது.

இதையடுத்து தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து நாளை இஸ்ரோவின் 100-வது செயற்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்கான கவுண்ட்-டவுன் இன்று காலை 5:29 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கைக்கோளானது நாளை இந்திய நேரப்படி 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

விண்ணில் செலுத்தப்படும் 31 செயற்கைகோள்களில், 28 செயற்கைகோள்கள் வெளிநாட்டை சேர்ந்ததாகும். மற்ற மூன்று செயற்கைகோள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. மொத்தமாக 1323 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-40 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சந்திராயன் 2 விண்கலம் தயாரிக்கும் பணி முடிவடையும் நிலையில் இருப்பதால், இந்த ஆண்டுக்குள் அதுவும் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். #Sriharikota #PSLVC40 #ISRO #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com