சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் 12 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் 12 பேர் பலி
Published on

பெய்ரூட்:

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும், அமெரிக்காவும் சிரியா நாட்டினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் டேர் எஸ்ஸர் நகரில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com