பாக்தாத்: கார் குண்டு தாக்குதலில் 9 பேர் பலி

பாக்தாத்: கார் குண்டு தாக்குதலில் 9 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
Published on

பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அமெரிக்க விமானப் படையின் உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மோசூல் நகரம் சமீபத்தில் முழுமையாக மீட்கப்பட்டது.

அதை தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் இருந்த மேலும் சில நகரங்கள் படிப்படியாக கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் அவர்கள் வசம் இருக்கும் கடைசி நகரமான தல் அபர் பகுதியை மீட்க தாக்குதல் நடத்துமாறு ஈராக் ராணுவத்துக்கு அந்நாட்டி பிரதமர் ஹைதர் அல்-அபாடி கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, முன்னதாக மீட்கப்பட்ட மோசூல் நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தல் அபர் நகருக்குள் ராணுவ டாங்கிகளுடன் ஏராளமான வீரர்கள் புகுந்துள்ளனர். அங்கு பதுங்கியுள்ள சுமார் 2 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகளை தீர்த்துகட்ட உச்சகட்ட தாக்குதல் நடைபெற்று வருகிறது.

அந்நகரின் பெரும்பான்மையான பகுதிகள் மீட்கப்பட்டு விட்டதாக ஈராக் அரசு அறிவித்துள்ள நிலையில், பாக்தாத் நகரின் கிழக்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சட்ர் நகரில் உள்ள ஜாமிலா மார்க்கெட் பகுதியில் இன்று காலை வெடிகுண்டுகள் நிரப்பட்ட ஒரு கார் திடீரென்று வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com