

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வந்துள்ளனர்.
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடக்கிறது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். இன்றைய முதல் நாள் ஏலம் நடைபெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை தக்க வைத்துக் கொள்ளுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இதற்கு காரணம் ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி அஸ்வினை தக்கவைத்துக் கொள்ளும் நிலை சென்னை அணிக்கு இல்லாததே காரணம்.
அஸ்வின் 2-வது நபராக ஏலம் விடப்பட்டார். அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7.60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதே விலைக்கு சென்னை அணி தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தொகையை விட அதிக விலை கொடுக்க விரும்பவில்லை. இதனால் அஸ்வினை பறிக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
டு பிளிசிஸ்-ஐ 1.6 கோடி ரூபாய்க்கும், பிராவோவை 6.4 கோடி கொடுத்தும் பஞ்சாப் அணி வாங்கியது. ஆனால் ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது.