

ஏற்கனவே டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்திருந்தது. நேற்றைய முதல்நாள் ஏலத்தில் கேதர் ஜாதவ், வெயின் பிராவோ, கர்ண் சர்மா, ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், டு பிளிசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரை ஏலம் எடுத்திருந்தது.
சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் இருந்த போதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஷேன் வாட்சன், பிராவோ ஆகியோர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்கள்.
ரபாடா உள்பட சில வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்க ஆர்வம் காட்டியது. ஆனால் எதிரணிகள் ஆர்டிஎம் மூலம் தக்கவைத்துக் கொண்டது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களை எடுக்க முடியவில்லை.
இன்று 2-வது நாள் ஏலம் தொடங்கியது. விக்கெட் கீப்பரான எம். ஜெகதீசனை 20 லட்சம் ரூபாய்க்கும், சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெரை 50 லட்சம் ரூபாய்க்கும் எடுத்தது.
ஒரு வழியாக ஷர்துல் தாகுர் என்ற வேகப்பந்து வீச்சாளரை 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 14 வீரர்களை எடுத்துள்ளது. குறைந்த பட்சம் 18 வீரர்களை எடுக்க வேண்டும். அதன்படி இன்னும் 4 வீரர்களை கட்டாயம் எடுக்க வேண்டும். கைவசம் 13 கோடியே 70 லட்சம் ரூபாய் உள்ளது. ஆனால் நட்டசத்திர வேகப்பந்து வீச்சாளர் என்று யாரையும் எடுக்கவில்லை.