மேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவிற்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

விராட் கோலி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் மேக்ஸ்வெல் 78 ரன்களும், ஏபிடி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 76 ரன்களும் விளாசினர்.
டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல்
டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல்
Published on

ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த ராஜத் படிதார் 1 ரன்னில் வெளியேறினார். ஆர்சிபி 9 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்தில் அரைசதம் அடித்தார். ஸ்கோர் 11.1 ஓவரில் 95 ரன்னாக இருக்கும்போது தேவ்தத் படிக்கல் 25 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். இவரும் மேக்ஸ்வெல்லும் கொல்கத்தா பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மேக்ஸ்வெல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டி வில்லியர்ஸ் 27 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஜேமிசன் உடன் இணைந்து கடைசி மூன்று ஓவரில் துவம்சம் செய்துவிட்டார். 18-வது ஓவரில் 17 ரன்களும், 19-வது ஓவரில் 18 ரன்களும், கடைசி ஓவரில் 21 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

டி வில்லியர்ஸ் 34 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேமிசன் 4 பந்தில் 11 ரன் எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com