ஐ.பி.எல். அணியில் இணைந்த சுமித்,வார்னர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய சுமித், வார்னரின் தண்டனை காலம் முடிவடைந்ததை யொட்டி அவர்கள் மீண்டும் தங்களது ஐபிஎல் அணிகளோடு இணைந்து கொண்டனர். #IPL2019 #Smith #Warner
ஐ.பி.எல். அணியில் இணைந்த சுமித்,வார்னர்
Published on

புதுடெல்லி:

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை இந்த மாதம் முடிகிறது. இருவரும் சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்களோடு துபாயில் பயிற்சியில் இணைந்தனர்.

இந்த நிலையில் இருவரும் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள். இதற்காக இருவரும் தங்களது அணிகளோடு இணைந்து கொண்டனர். சுமித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் வார்னர் சன்ரைசஸ் ஐதராபாத் அணியிலும் ஆடுவார்கள். #IPL2019 #Smith #Warner

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com