திருப்பதி கோவில் உள்ளே 250 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்த ஏற்பாடு

திருமலை முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக ஏழுமலையான் கோவில் உள்ளே 250 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திருப்பதி கோவில் உள்ளே 250 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்த ஏற்பாடு
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக, திருமலை அன்னமயபவனில் நேற்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தலைமை தாங்கி பேசினார்.

மத்திய தேசிய சிறு தொழில் நிறுவனமும், திருமலை-திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளது. அதற்காக, திருமலை முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக ஏழுமலையான் கோவில் உள்ளே 250 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து திருமலையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்த காட்சி.

ஸ்ரீவாரிசேவா சங்கத்தில் பக்தர்களுக்கு சேவை செய்ய, இளம் வயதினரை சேர்த்துக்கொள்ள வேண்டும். 25 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு வரை படித்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வான நபர்களுக்கு திருப்பதியில் 3 நாட்கள் பயிற்சி அளித்து, பக்தர்களுக்கு சேவை செய்ய தேவஸ்தான துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com