இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டு நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இதை பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் நடத்தி முறியடித்து வருகிறார்கள்.

தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடுவதற்கு வசதியாக பாகிஸ்தான் படைகளும் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதையும் ராணுவம் முறியடித்து வருகிறது.

இன்று பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்  ஊடுருவலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் உஷாரானார்கள். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com