காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டார் பகுதியில் இந்திய எல்லைக்குள் உடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டார் பகுதியில் இந்திய எல்லைக்குள் உடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எல்லையை கடந்து இந்திய பகுதிக்குள் இரு தீவிரவாதி ஒருவன் நுழைந்துள்ளனர்.

இதனை கவனித்து விட்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்தும் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் முன்னேறி வந்ததால் பாதுகாப்பு படையினர் இருவரையும் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com