காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை - ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரி அருகே இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை - ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி அருகே உள்ள ஸோரோவார் என்ற பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஒரு தீவிரவாதி நுழைந்துள்ளான். இதனை கண்ட பாதுகாப்பு படையினர் அவனை சுற்றிவளைத்து தாக்கினர்.

சிறிது நேர சண்டைக்கு பின்னர் அந்த தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். கடந்த இரு நாட்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இதன் காரணமாக எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் பொது வெளிகளில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com