தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 502 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.
மயங்க அகர்வால் பந்தை அடித்த காட்சி
மயங்க அகர்வால் பந்தை அடித்த காட்சி
Published on

விசாகப்பட்டினம்:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கினார். மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தொடக்க வீரராக முதல் முறையாக ஆடினார்.

இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 4-வது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித்சர்மாவும், அகர்வாலும் தொடர்ந்து ஆடினார்கள்.

ரோகித் சர்மா 176 (244) 23 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா 6 ரன்னிலும் கேப்டன் விராட் கோலி 20 ரன்னிலும் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து ஆடி வந்த இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ரகானே 15 ரன்னில் வெளியேற சிறப்பாக ஆடி வந்த மயங்க் அகர்வால் 215 ரன்னில் அவுட் ஆனார். இதில் 23 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

இதனையடுத்து களமிறங்கிய விகாரி 10 ரன்னிலும் சகா 21 ரன்னிலும் வெளியேறினர். இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் விராட் கோலி டிக்ளேர் அறிவித்தார். ஜடேஜா 30 ரன்னிலும் அஸ்வின் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ் 3 விக்கெட்டுகளும் பிலாண்டர், முத்துசாமி, எல்கர், டேனி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com