

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகபந்து வீச்சு ஆல்ரவுண்டரான லேன்சி குளுஸ்னர், ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து குளுஸ்னர் கூறுகையில் ‘‘ஒரு ஆல்ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாக இந்தியாவிற்கு கூடுதல் பலம் சேர்ப்பார். சிறந்த திறமையுடைய ஹர்திக் பாண்டியாவால் இந்தியா பலனடையும். மீடியம் பேஸ் பந்து வீசுவதுடன், லோ-ஆர்டரில் களம் இறங்கி பேட்டிங் செய்வார். அணியை சமமான வகையில் தேர்வு விராட் கோலிக்கு ஹர்திக் பாண்டியா உதவிகரமாக இருப்பார்.