கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் ஆர்வம்

சுமார் ரூ.52000 கோடி கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் ஆர்வம்
Published on

மும்பை:

இந்தியாவில் முதல்முறையாக விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் தொடங்கியது. பின்னர் 1953-ம் ஆண்டில் மத்திய அரசால் அந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு, ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, தற்போது கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்குவதற்கு தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஆர்வக் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் விமான சேவையில் இண்டிகோ விமான நிறுவனம் முதலிடம் வசிக்கிறது.

முன்னதாக ஏர் இந்தியா நிறுவனத்தை, ரூ.30,000 கோடி விலையில், டாடா குழுமம் வாங்கும் என்று, நிதியமைச்சக வட்டாரங்கள் மதிப்பீடு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com