

கோல்டுகோஸ்ட்:
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்குதல் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் லாதர் (18) வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் மொத்தம் 295 (136+159) கிலோ எடையை தூக்கிய தீபக் லாதர் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை பெற்றுத் தந்தார். தங்கப்பதக்கத்தை வேல்ஸ் வீரரும், வெள்ளிப்பதக்கத்தை இலங்கை வீரரும் தட்டிச்சென்றனர்.
முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். நேற்று, இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. #CommonwealthGames2018 #CWG2018