இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை தேர்வு- முகமது‌ சமி, ரி‌ஷப்பாண்டுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி தேர்வு நாளை நடக்கிறது. முகமதுசமி, ரிஷப்பாண்டுக்கு வாய்ப்பு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvENG
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை தேர்வு- முகமது‌ சமி, ரி‌ஷப்பாண்டுக்கு வாய்ப்பு
Published on

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

ஒருநாள் தொடர் முடிந்த பிறகு இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நாளை (18-ந்தேதி) அல்லது 19-ந்தேதி நடை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீரர் பும்ரா காயம் காரணமாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கு உடல் தகுதி பெறுவது சந்தேகம்.

இதனால் அவரது இடத்தில் முகமது‌ஷமி இடம் பெறலாம் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதால் முகமது ‌ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

டெஸ்ட் அணிக்கு முதல் நிலை விக்கெட் கீப்பரான விர்த்திமான்சகா காயத்தில் உள்ளார். இதனால் வங்காதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அவர் ஆடவில்லை. தினேஷ்கார்த்திக் அவர் இடத்தில் இடம் பெற்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தினேஷ்கார்த்திக் டெஸ்டில் ஆடி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com