ஏழு லட்சம் கோடியில் சாலைகளை சீரமைக்கும் திட்டம்: 2022-இல் முடிக்க மத்திய அரசு திட்டம்

இந்திய சாலைகளை முழுமைாக சீரமைக்க மத்திய அரசின் புதிய திட்டத்தில் நாடு முழுக்க சுமார் 83,677 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட இருக்கிறது.
ஏழு லட்சம் கோடியில் சாலைகளை சீரமைக்கும் திட்டம்: 2022-இல் முடிக்க மத்திய அரசு திட்டம்
Published on

இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டினால், எப்பேர்ப்பட்ட கடினமான சாலைகளையும் மிக எளிதாக கடந்து விடலாம் என்ற பரவலான கருத்தை இந்திய ஓட்டுநர்கள் எவரும் மறுக்க முடியாது.

சாலை விபத்துக்களால் இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் முன்று பேர் இறப்பதாக தேசிய குற்ற ஆணை காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க மோசமான சாலைகளால் போக்குவரத்து நெரிசல், முறையற்ற பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனை ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் போக்குவரத்து சார்ந்த பிரச்சனைகளை குறைக்கும் நோக்கில், நாடு முழுக்க சாலைகளை சீரமைக்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் ஏழு லட்சம் கோடி செலவில் 83,677 கிலோமீட்டர் சாலைகளை முற்றிலுமாக சீரமைக்கப்பட இருக்கின்றன. 2022-ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுக்க சாலை போக்குவரத்து சார்ந்த இடர்பாடுகளை களையும் விதமாக பாரத்மாலா பரியோஜனா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது. திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.5,35,000 கோடி செலவில் சுமார் 34,800 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட இருக்கிறது.  

இந்த திட்டத்தின் மூலம் 44 புதிய பொருளாதார மையங்களுக்கான சாலை போக்குவரத்து அமைக்கப்படும். மொத்தம் 9000 கிலோமீட்டர் தொலைவில் முக்கிய நகரங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார மையங்களை இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதும், நெடுஞ்சாலைகளில் சரக்கு போக்குவரத்தை 40 சதவிகிதத்தில் இருந்து 80 சதவிகிதம் வரை அதிகரிக்க முடியும்.

புதிய பாரத்மாலா திட்டத்தின் மூலம் வாகனங்களின் பயண வேகத்தை 20 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்த முடியும் என மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதோடு, சாலை விபத்துக்களை 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுக்க நெரிசல் மிகுந்த பகுதிகளை சீரமைக்கும் நோக்கில், பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு தற்போது ஏற்படுவதை விட பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும். இத்துடன் ரிங் ரோடு, பைபாஸ், நடைமேடை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நாடு முழுக்க 185 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com