ஆப்கானிஸ்தான் கார்குண்டு தாக்குதலில் இந்தியர் மரணம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Indiankilled #IndiankilledinKabul #carbombattack #Kabulcarbombattack
ஆப்கானிஸ்தான் கார்குண்டு தாக்குதலில் இந்தியர் மரணம்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்றிரவு தலிபான்கள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் அங்கிருந்த வீடுகள் பலத்த சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்ததாக நேற்று முதல்கட்ட தகவல் வெளியானது. இன்றைய நிலவரப்படி இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் அதில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. 

பலியான இந்தியர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற உடனடி தகவல் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் கொல்லப்பட்டவரின் உடலை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் காபுலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #Indiankilled #IndiankilledinKabul #carbombattack #Kabulcarbombattack

X

Maalai Malar
www.maalaimalar.com