முதன் முறையாக விமானப்படைக்கு அசோக் சக்ரா: வீரமரணம் அடைந்த வீரருக்கு விருது

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியின் உறவுக்கார தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகளை கொன்று தானும் உயிர் நீத்த விமானப்படை வீரர் ஜே.பி நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
முதன் முறையாக விமானப்படைக்கு அசோக் சக்ரா: வீரமரணம் அடைந்த வீரருக்கு விருது
Published on

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜே.பி நிராலா இந்திய விமானப்படையில் கம்மாண்டராக இருந்து வந்தார், பதன்கோட் தாக்குதல் உள்ளிட்ட சில ஆபரேஷன்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் அம்மாநில போலீசாருடன் அவர் கை கோர்த்து செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி காஷ்மீரின் பந்திப்போராவில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்த போலீசார் அவர்களை நோக்கி தாக்குதல்களை தொடுத்தனர். இதில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் உறவுக்கார மற்றொரு தீவிரவாதி உள்பட மூன்று தீவிரவாதிகளை நிராலா சுட்டுக்கொன்றார்.

ஆனால், தீவிரவாதிகள் தாக்குதலில் அவர் வீர மரணம் அடைந்தார். அவரது இந்த தியாகத்தை போற்றும் வகையில் அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் இன்று நடக்கும் விழாவில் நிராலாவின் குடும்பத்தினரிடம் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.

இதற்கு முன்னதாக ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமே அசோக் சக்ரா விருதை பெற்று வந்தனர். முதன்முறையாக விமானப்படை வீரருக்கு இந்த ஆண்டுக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com