

கேப்டவுன்:
இந்தியாவுடனான அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் டி வில்லியர்ஸ் விளையாட உள்ளார் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி முடிவடைந்ததை தொடர்ந்து, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 3-வது போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியின் போது, டி வில்லியர்ஸ் காயமடைந்தார். இதையடுத்து, அடுத்த 3 ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், டு பிளசிஸ் மற்றும் குயிண்டான் டி காக் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு ஓய்வில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுடனான அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் டி வில்லியர்ஸ் விளையாட உள்ளார் என தென் ஆப்ரிக்கா அணி கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காயம் குணமடைந்துள்ள நிலையில் டி வில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் விளையாட உள்ளார் என தெரிவித்துள்ளது. #SAvIND #INDvsSA #tamilnews