அயர்லாந்துக்கு எதிரான 2-வது வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் - ரோகித் சர்மா

அயர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெறுவது இங்கிலாந்து தொடருக்கான நம்பிக்கையை கொடுக்கும் என ரோகித் தெரிவித்துள்ளார். #IREvIND #RohitSharma
அயர்லாந்துக்கு எதிரான 2-வது வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் - ரோகித் சர்மா
Published on

பின்னர் விளையாடிய அயர்லாந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பெறும் வெற்றி இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கான நம்பிக்கையை கொடுக்கும் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்குப்பின் இங்கிலாந்துக்கு எதிரான சவாலான தொடர் எங்களுக்கு காத்திருக்கிறது. ஆகையால், இது ஒரு நல்ல தயார் நிலையாக இருக்கும். அயர்லாந்துக்கு எதிராக 2-வது போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அந்த வெற்றி இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com