ஜி.சாட்-19 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது: இஸ்ரோ

ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஜி.சாட்-19 செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜி.சாட்-19 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது: இஸ்ரோ
Published on

ஐதராபாத்:

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பி வந்தது. அதை மாற்றியமைக்கும் விதமாக உள் நாட்டிலேயே (இந்தியாவிலேயே) மிகப் பெரிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை தயாரித்துள்ளது.

இது கிரையோ ஜெனிக் தொழில் நுட்பத்தில் செயல்படும் இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஜி.சாட்-19 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்புக்கான இந்த ஜி.சாட்-19 செயற்கைக் கோள் 3,136 கிலோ எடை கொண்டது. அதி நவீன வசதிகளுடன் ஆன தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களை கொண்டது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண் காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் மார்க் 3 ராக்கெட் தான் முதன் முறையாக அதிக எடையுள்ள செயற்கை கோளை விண்ணுக்கு சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com