ரோகித் அபார ஆட்டம் - வங்காளதேசத்திற்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

முத்தரப்பு டி20 தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். #NidahasTrophy2018 #INDvBAN
ரோகித் அபார ஆட்டம் - வங்காளதேசத்திற்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
Published on

கொழும்பு:

இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. கொழும்பு நகரில் நடக்கும் இன்றைய போட்டியில் வங்காளதேசத்துடன் இந்தியா மோதுகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.

ரோகித்சர்மா மற்றும் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக ரன்கள் எடுத்த இந்த ஜோடியை 10-வது ஓவரில் பிரிந்தது. 35 ரன்கள் எடுத்த தவான் ருபேல் உசைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா உடன் கைகோர்த்த ரோகித் ரன்களை அதிரடியாக குவித்தார்.

இரண்டு பேரும் அதிரடியாக ஆட இந்தியாவின் ரன் உயர்ந்தது. கடைசி ஓவரில் 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரெய்னா ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து இந்தியா 176 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.

177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியுள்ளது. #NidahasTrophy2018 #INDvBAN

X

Maalai Malar
www.maalaimalar.com