இந்தியா - ஓமன் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் - மோடி முன்னிலையில் கையொப்பமானது

ஓமன் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று இருநாடுகளுக்கு இடையில் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. #PMModi #Oman
இந்தியா - ஓமன் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் - மோடி முன்னிலையில் கையொப்பமானது
Published on

5 நாட்கள் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட் நகரை வந்தடைந்தார்.

ஓமன் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். வர்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஓமன் நாட்டில் பணியாற்றும் இந்தியர்களின் உழைப்பையும், நேர்மையையும் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் வெகுவாக பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com