

பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு சென்றார். நேற்று அவர் அந்நாட்டின் பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று.
இந்த சந்திப்பின்போது பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தனர்.