முதல் டி20 போட்டி - இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. #ENGvIND
முதல் டி20 போட்டி - இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து
Published on

லண்டன்:

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர்.

அணியின் எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது, ஜேசன் ராய் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஹேல்ஸ் 8 ரன்னில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 95 ஆக இருந்தது.

ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 107 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அவர் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வில்லி 15 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, 160 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா விளையாடி வருகிறது. #ENGvIND

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com