மதங்களுக்குள் இந்தியா உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை - பிரதமர் பேச்சு

புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களின் சித்தாந்தங்களும் மனிதநேய அடிப்படையில் உருவானவை என குறிப்பிட்டார். #pmmodi #religions #Indiamakes
மதங்களுக்குள் இந்தியா உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை - பிரதமர் பேச்சு
Published on

புதுடெல்லி:

டெல்லியில் இன்று நடைபெற்ற புத்த பூர்ணிமா விழாவில் இலங்கை, ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த புத்த துறவிகள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் போதனைகளை குறிப்பிடுகையில், இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களின் சித்தாந்தங்களும் மனிதநேய அடிப்படையில் உருவானவை என சுட்டிக் காட்டினார்.

புத்தரின் போதனைகள் அனைத்துமே மனிதநேயத்தின் அடிப்படையில் ஆனவை. புத்தமத சித்தாந்தம் இந்த நாட்டில் இருந்து தோன்றியதை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது.

மற்றவர்களின் சித்தாந்தங்களை தாக்கும் வரலாறோ, பாரம்பரியமோ இந்தியாவுக்கு இருந்தது கிடையாது. மதங்களுக்குள் இந்தியா உயர்வு, தாழ்வுப்படுத்திப் பார்க்கவும் நாம் முயற்சித்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார். #tamilnews #pmmodi #religions #Indiamakes  

X

Maalai Malar
www.maalaimalar.com