

லண்டன்:
இங்கிலாந்தின் எடின்பிர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஹரீஷ் நாயர் தலைமையிலான குழு மூச்சு குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று குறித்து உலகம் முழுவதும் ஆய்வு மேற் கொண்டனர்.
அதில் ஆண்டுக்கு 3 கோடியே 30 லட்சம் குழந்தைகள் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இந்தியா, சீனா, நைஜியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நோய் சுவாச உறுப்புகளை கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் 2-வது வயதில் அதிக அளவில் தாக்குகிறது. நுரையீரல் தொற்று நோயால் ஆண்டுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் மேற்கண்ட 5 நாடுகளில் இறக்கின்றனர்.
இது இந்த நோயினால் சர்வதேச அளவில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் பாதி அளவாகும். இந்த நோயில் இருந்து மருந்து மாத்திரைகள் மூலம் குழந்தைகள் இறப்பை தடுக்க முடியும். அதற்கான மருந்து இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வம்சாவளி நிபுணர் ஹரீஷ் நாயர் தெரிவித்துள்ளார்.