ஒடிசாவில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரி அதிகாரி கைது

ஒடிசாவில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரி அதிகாரியை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் விசாரணைக்கு எடுத்தது.
ஒடிசாவில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரி அதிகாரி கைது
Published on

புதுடெல்லி:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வருமானவரி அதிகாரி நிரஞ்சன் பெகாரியா.

இவர் பதர்க் மாவட்டத்தில் பெட்ரோல் ‘பங்க்‘ உரிமையாளர் ஒருவரிடம் வரி ஏய்ப்பு பிரச்சினையில் இருந்து விடுபட ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்தார்.

பெட்ரோல் பங்க உரிமையாளரிடம் வருமான வரி அதிகாரி நிரஞ்சன் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றபோது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை பொறி வைத்து பிடித்தனர்.

அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சி.பி.ஐ. தங்களது காவலில் விசாரணைக்கு எடுத்தது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com