தவறான தகவல்களை அளிக்காதீர்- மாதச் சம்பளக்காரர்களை எச்சரிக்கும் வருமான வரித்துறை

வருமான வரி தாக்கல் செய்யும் போது வருமானத்தை குறைத்து காட்ட தவறான தகவல்களை அளிக்காதீர்கள் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவறான தகவல்களை அளிக்காதீர்- மாதச் சம்பளக்காரர்களை எச்சரிக்கும் வருமான வரித்துறை
Published on

புதுடெல்லி:

மாதச் சம்பளம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்யும் போது, வரித்தொகையை குறைத்து காட்டுவதற்காக சில தவறான தகவல்களை அளிப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதனை அடுத்து, வரியை குறைப்பதற்காக தவறான தகவல்களை வருமான வரித்துறைக்கு அளித்தால் அது மோசடியாக கருதப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது போன்ற புகார் ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews 

X

Maalai Malar
www.maalaimalar.com