கர்நாடக மந்திரி வீடு மற்றும் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

கர்நாடக மந்திரி சிவகுமார் வீடு மற்றும் அவ்ருக்கு சொந்தமான குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மந்திரி வீடு மற்றும் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி  சோதனை
Published on

கர்நாடக மாநிலத்தில் எரிசக்தி துறை மந்திரியாக இருப்பவர் சிவகுமார். இவரது வீடு பெங்களுரில் அமைந்துள்ளது. இவருக்கு சொந்தமான ஈகிள்டன் கோல்ப் விடுதியில் தான் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மந்திரி சிவகுமாருக்கு சொந்தமான கனகபுரா மற்றும் சதாசிவநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை ந்டத்தினர். மேலும், குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு சொந்தமான சொகுசு விடுதியிலும் திடீரென புகுந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com