ஜனாதிபதி தேர்தல்: தோல்வியிலும் 50 வருட சாதனையை முறியடித்த மீரா குமார்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மீரா குமார், தோல்வியிலும் 50 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்: தோல்வியிலும் 50 வருட சாதனையை முறியடித்த மீரா குமார்
Published on

புதுடெல்லி:

ஜனாதிபதி பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். பதிவான மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 69 ஆயிரத்து 358. இதில், ராம்நாத் கோவிந்த் 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவர் 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்தார். மீராகுமார் 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், தோல்வியிலும் 50 வருட சாதனையை எதிர்க்கட்சிகள் தரப்பில் களமிறக்கப்பட்ட மீரா குமார் முறியடித்து உள்ளார். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இரண்டாவது இடத்தில் அதிகமான வாக்குகளை வாங்கியவர்கள் என்ற நிலையை அவர் எட்டி உள்ளார்.

கடந்த 1967-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் தலைமை நீதிபதி கோகா சுப்பா ராவ், அனைத்து எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் ஜாகிர் ஹுசைனிடம் தோல்வி அடைந்தார். அவர் 3.63 லட்சம் வாக்குகளை பெற்று சாதனைப் படைத்தார். அதனை 50 வருடங்களுக்கு பின்னர் மீரா குமார் தற்போது உடைத்து உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சுப்பா ராவின் இரண்டாவது சாதனையான 43 சதவீத வாக்கு என்பது இன்றும் உடைக்க முடியாத வரலாறாக உள்ளது. இப்போது மீரா குமார் 34 சதவீத வாக்குகளைப் பெற்று உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com