துணிச்சல் இருந்தால் சசிகலாவை நீக்கி பார்க்கட்டும்: தங்க.தமிழ்செல்வன் சவால்

துணிச்சல் இருந்தால் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கி பார்க்கட்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க. தமிழ்செல்வன் சவால் விடுத்துள்ளார்.
துணிச்சல் இருந்தால் சசிகலாவை நீக்கி பார்க்கட்டும்: தங்க.தமிழ்செல்வன் சவால்
Published on

புதுச்சேரி:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புதுவை ஓட்டலில் தங்கி உள்ளனர். இதில், தங்க.தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது ஒற்றுமையை காண்பிக்கும் நோக்கத்தில் புதுவையில் 3 நாட்கள் தங்கி இருக்க வந்துள்ளோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பொறுத்திருந்து பாருங்கள். நல்ல செய்தி வரும்.

சசிகலாவை நீக்குவோம் என்கிறார்கள். துணிச்சல் இருந்தால் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கி பார்க்கட்டும். பொதுக்குழுவை கூட்டினால் அதில் அவர்கள் அதிக பெரும்பான்மையை காட்ட வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து பெரும்பான்மையை காட்ட முடியுமா? அவர்கள் பொதுக்குழுவை கூட்டினால் தான் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் யார் பக்கம் இருக்கிறார்கள்? என்பது தெரிய வரும். நாங்கள் எடுத்த சபதத்தை விரைவில் முடித்து காட்டுவோம்.

எங்களைப்பற்றி ஊடகங்கள் தவறாக சித்தரிக்கின்றன. அது தேவையற்றது.

இவ்வாறு தங்க.தமிழ் செல்வன் கூறினார்.

கதிர்காமு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ஓய்வெடுக்கவே புதுவைக்கு வந்துள்ளோம். இங்கிருந்தபடி மக்கள் பணிகளை செய்து வருகிறோம். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

பொதுச்செயலாளர் சசிகலா கூட்டினால் தான் அது உண்மையான பொதுக்குழு. பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய பிறகு அவர்கள் தான் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நம்பக்கத் தன்மையான தலைமை வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு, ஆட்சியை கலைப்பது எங்கள் நோக்கம் அல்ல, அம்மா ஆட்சி நீடிக்க வேண்டும்.

இவ்வாறு கதிர்காமு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com