தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
Published on

சென்னை :

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் நிதித்துறை இணைச் செயலாளராக பணியாற்றிய ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டீல், அயல்பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து மின் ஆளுமை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

முதல்-அமைச்சர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய இன்னொசெண்ட் திவ்யா, விடுமுறை காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராகுல் நாத், கன்னியாகுமரி மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டராக (மேம்பாடு) மாற்றப்படுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சப்-கலெக்டர் ஜி.எஸ்.சமீரான், ராமநாதபுரத்தில் மீன்வள கூடுதல் இயக்குனராக மாற்றப்படுகிறார். சிவகாசி சப்-கலெக்டர் அமர் குஷாவா, உதகமண்டலம் மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

செய்யாறு சப்-கலெக்டர் பிரபுசங்கர், திண்டிவனம் சப்-கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் சப்-கலெக்டர் பி.ஆகாஷ், சேரன்மகாதேவி சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் ஆர்.லலிதா, சென்னை மாநகராட்சி துணைக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.கஜலட்சுமி சேலத்தில் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சேரன் மகாதேவி சப்-கலெக் டர் வி.விஷ்ணு, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். திண்டிவனம் சப்-கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com