

மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களுக்கு இன்னும் மின்சாரம் வரவில்லை. குடிநீர் சப்ளை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் அனைவரும் இரவு- பகல் பாராமல் இதற்காக உழைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லா பணிகளும் விரைவில் முடிந்து விடும். இதற்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.