நீட் தேர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்

முதுகுளத்தூர் அருகே நீட் தேர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

முதுகுளத்தூர்:

தமிழக மாணவர்களின் உயிரை குடித்து வரும் நீட் தேர்வை தமிழக அரசு நடத்த கூடாது என்பதை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முதுகுளத்தூரில் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு நகர் தலைவர் ஜபருள்ள கான் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர், துணைச் செயலாளர் சல்மான் ரபிக் 

முன்னிலை வைத்தனர். மாவட்ட தலைவர் முகமது இக்பால் கண்டன உரையாற்றினார். 

இதில் நகர நிர்வாகிகள் ஜியாவுதீன் சேட், சாகிர் உசேன், நாகூர் மீரான், அப்துல்காதர், முகைதீன், சகுபர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com