வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களை போற்ற வேண்டும்: பிரதமர், உள்துறை மந்திரிக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்

போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களை போற்ற வேண்டும்: பிரதமர், உள்துறை மந்திரிக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்
Published on

சண்டிகர்:

போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக இருப்பவர்  அவினாஷ் ராய் கண்ணா. இவர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவினாஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், போரில் வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களின் நினைவை போற்றும் வகையில் படங்கள் மற்றும் அவர்களை பற்றிய விரிவான தகவல்களை கல்வி நிலையங்களில் பாடத்திட்டங்களாக சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com