உள்துறை மந்திரி அமித் ஷா சோமநாதரை தரிசனம் செய்தார்

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோவிலுக்கு சென்ற உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மாலை சாமி தரிசனம் செய்தார்.
பாலபிஷேகம் செய்யும் அமித் ஷா
பாலபிஷேகம் செய்யும் அமித் ஷா
Published on

அகமதாபாத்:

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் வரும் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதால், பாஜகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இரு மாநிலங்களிலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில், இரு மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று குஜராத் மாநிலம் சென்றார். அங்கு கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு அமித் ஷா சோமநாதருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டார். 

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் பிரசாரம் நிறைவடைந்ததும் அமித் ஷா குஜராத்தின் சோமநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com