கருணை இல்லம்: சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மர்மமான முறையில் 1500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கருணை இல்லம்: சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் கருணை இல்லத்தில், முதியவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு, எலும்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி கல்யாணராமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘கருணை இல்லத்தில் தற்போது வரை 1,500-க்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இந்த தகவலை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com