தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறினார்கள்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
Published on

சென்னை:

நிர்பயா நிதியின் மூலமாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக செயல் திட்டங்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் சில வேதனையான கருத்துக்களை தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மை காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தகுந்த நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்’ என்று பதில் அளித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘பெண் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு, பாலியல் குற்றங்கள் என்று இதுவரை தமிழகம் முழுவதும் பதிவான வழக்குகளின் விவரங்களை, அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com