தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- ஐகோர்ட் வேதனை

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- ஐகோர்ட் வேதனை
Published on

சென்னை:

நிர்பயா நிதியை முறையாக பயன்படுத்தக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாகப் பெற்று முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கு இன்று நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழகத்தில் கொலை- கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் தனியாக இருக்கும் பெண்கள் கொலை  செய்வதும், அவர்களிடம் கொள்ளையடிப்பதும் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும் பெண்கள் கொலை, கொள்ளை, சங்கிலி பறப்பு தொடர்பான வழக்குகளின் விவரங்களை ஜூன் 6-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com