தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் அடுத்த இருநாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் அடுத்த இருநாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Heavyrain #Tamilnadurain
தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் அடுத்த இருநாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
Published on

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கால் பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 5 சென்டிமீட்டர் மழையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பரூர் பகுதியில் 4 சென்டிமீட்டர் மழையும் பெய்தது.

இதேபோல், தருமபுரி, மதுரை, வேலூர், கரூர், சேலம், விருதுநகர், தூத்துக்குடி திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 முதல் ஒரு சென்டிமீட்டர் வரையிலான மழை பெய்தது.

அடுத்த இருநாட்களுக்கு தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல பகுதிகளில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Heavyrain  #Tamilnadurain

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com