திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூவர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூவர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழையும், வால்பாறையில் 11 செ.மீ. மழையும், சேத்தியாத்தோப்பு, சிதம்பரத்தில் தலா 9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com