உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி - தேவே கவுடா

கர்நாடகம் மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் தேவே கவுடா தெரிவித்துள்ளார்.
தேவே கவுடா
தேவே கவுடா
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், கர்நாடகாவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் தேவே கவுடா தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவேகவுடா இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும். கர்நாடகாவில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com