வேட்புமனுவில் போலி ஜாதி சான்றிதழ்: ஒடிசா காங்கிரஸ் எம்.எல்.ஏ தகுதிநீக்கம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்த புகாரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜோகேஷ் குமார் சிங்கை தகுதி நீக்கம் செய்து ஒடிசா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வேட்புமனுவில் போலி ஜாதி சான்றிதழ்: ஒடிசா காங்கிரஸ் எம்.எல்.ஏ தகுதிநீக்கம்
Published on

புபனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தது. சந்தெர்கார் (தனி) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோகேஷ் குமார் சிங், தனது வேட்புமனுவில் போலி ஜாதி சான்றிதழை சமர்பித்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சகாதேவ் மற்றும் அஜய் படேல் என்பவர் ஒடிசா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த விசாரணையில் ஜோகேஷ் சிங் சார்ந்த ஜாதியானது, பட்டியலின ஜாதிகளில் இல்லை என்பதாலும், போலி ஜாதி சான்றிதழை அளித்து தனித்தொகுதியில் அவர் போட்டியிட்டது நிரூபிக்கப்பட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com