ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு

சட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பு கூறிய ஐகோர்ட், தி.மு.க. வேட்பாளர் துரைசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வி.பி.துரைசாமியை விட 9 ஆயிரத்து 631 ஓட்டுகள் அதிகம் பெற்று சரோஜா வெற்றி பெற்றார். தற்போது சரோஜா அமைச்சராக உள்ளார். 

இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வி.பி.துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே, வி.பி.துரைசாமி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அவரது வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த ஐகோர்ட், சட்டசபை தேர்தலில் சரோஜா பெற்ற வெற்றி செல்லும் என உத்தரவிட்டதுடன், அவரது வெற்றியை எதிர்த்து வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com