அரூர் அருகே சாராய வழக்கில் 4 பேர் கைது

அரூர் அருகே சாராய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அரூர்:

அரூர் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது சாராயம் காய்ச்சி விற்றதாக வேடகட்டமடுவு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது24), சோரியம்பட்டி அம்பேத்கர் (52), கோட்டப்பட்டி சின்ராஜ் (24) பாப்பிசெட்டிப்பட்டியை சேர்ந்த பூவரசு (24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், 300 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com