நைஜர்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போலீசார் பலி

ஆப்ரிக்க நாடான நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போலீசார் பலியானதாகவும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நைஜர்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போலீசார் பலி
Published on

நையாமே:

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜர் - மாலி எல்லையோரம் உள்ள அயோரோவ் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக நைஜர் அரசு தெரிவித்துள்ளது. மாலி நாட்டில் இருந்து சிறிய ரக டிரக் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 15 போலீசார் பலியானதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற கிராமத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் கடந்த 4-ம் தேதி அமெரிக்க வீரர்கள் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஐ.எஸ் ஆதரவு இயக்கங்களின் சதிவேலையாக இருக்கலாம் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com