கும்மிடிப்பூண்டியில் மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி

கும்மிடிப்பூண்டியில் மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி காட்டுக் கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கலையரசி (வயது 18). இவர் சென்னை செங்குன்றும் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கலையரசிக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக இறந்தார்.

அதே பகுதியில் மேலும் பலருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com