குடும்பத் தகராறால் ஆத்திரம் - 3 மகன்களை கழுத்தை அறுத்துக் கொன்ற காவலர்

குஜராத்தில் குடும்பத்தகராறு காரணமாக காவலர் ஒருவர் தனது சொந்த மகன்களின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

பாவ்நகர்:

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவர் சுக்தேவ் சியால். இவர் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். இவர் நேற்று மதியம் தனது மகன்கள் 3 பேரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சம்பவத்தன்று சியாலுக்கும் அவரது மனைவிக்கும் பயங்கர சண்டை நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக தனது மகன்களான குசால் (9), உத்தவ் (5), மன்மீட் (3) ஆகிய மூவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்பு அருகிலிருந்த காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்றனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சியாலின் மனைவி குறித்து எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com